சேலம் : பள்ளியில் நடந்த கொடுமை., கையை அறுத்துக்கொண்டு, தூக்கில் தொங்கிய மாணவி கொடுத்த வாக்குமூலம்.! - Seithipunal
Seithipunal


சேலம் அருகே 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், கருமந்துறை பகுதியில் இயங்கிவரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த 22ஆம் தேதி வீட்டில் இருந்தபோது வீட்டில் இருக்கும்போது, பிளேடால் தனது கையை அறுத்துக் கொண்டும், மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

இதனை பார்த்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு சேலத்தில் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கடந்த ஐந்து தினங்களாக அந்த பள்ளி மாணவி ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்பது குறித்து பெற்றோர்களிடம், மருத்துவர்களிடம் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று அவருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அப்போது தற்கொலைக்கான காரணம் குறித்து அந்த மாணவி அதிர்ச்சி காரணத்தை தெரிவித்தார்.

அந்த தனியார் பள்ளியில் கராத்தே மாஸ்டராக இருக்கும் ஆத்தூர் சீலியம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா (வயது 46) என்பவர் தொடர்ந்து மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். ராஜாவின் அத்துமீறல் தொடரவே., உடனடியாக இதனை பள்ளி தாளாளர் ஸ்டீபன் தேவராஜிடம் புகார் அளித்துள்ளார்.

ஆனால், மாணவியின் புகார் குறித்து அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.  இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, அந்த காம கொடூரன் கராத்தே மாஸ்டர் ராஜாவை ஊர் பொதுமக்களே பிடித்து தர்ம அடி அடித்தனர். பின்னர் நேற்று கருமந்துறை போலீசில் அவனை ஒப்படைத்தனர். மேலும் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், கராத்தே மாஸ்டர் ராஜா மற்றும் நடவடிக்கை எடுக்காத தாளாளர் ஸ்டீபன் தேவராஜ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

salem school girl attempt suicide


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->