வாகன ஓட்டுநர் மர்ம மரணம்.. விசாரணை தீவிரம்.. காரணம் என்ன?..!! - Seithipunal
Seithipunal


சேலம் வாழப்பாடி அருகே அணைமேடு கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி (வயது 64) என்பவருக்கு மல்லிகா என்ற மனைவியும், யுவராஜ், மணி, ரவி என மூன்று மகன்களும் இருக்கின்றனர். 35 ஆண்டுகளுக்கு மேலாக தலைநகர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் கார் டிரைவராக இவர் பணியாற்றி வந்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து செல்லும் அமைச்சர்கள், முதல்-அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் டெல்லிக்கு சென்று தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்து பிரதமர், ஜனாதிபதி, மத்திய மந்திரிகள், உயர் அதிகாரிகளை சந்திக்க செல்லும்போது, டிரைவர் குமாரசாமி அரசுக்கு சொந்தமான காரில்  அழைத்துச் செல்வது வழக்கம். தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு பலமுறை குமாரசாமி கார் ஓட்டியுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர் ஓய்வுபெற்றுள்ளார். வாழப்பாடி அருகே இருக்கும் தனது சொந்த கிராமமான குறிச்சி அணைமேட்டில் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 29-ந் தேதி முதல் அவர் திடீரென மாயமாகி உள்ளார். இதன் காரணமாக உறவினர்கள் பல இடங்களில் அவரை தேடியுள்ளனர். இருப்பினும், அவர் கிடைக்காத நிலையில், நேற்று காலை வசிஷ்ட நதியோரத்தில் இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் மர்மமான முறையில் பிணமாக மிதப்பது தெரியவந்துளது.

இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடந்த 29-ந் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து அவர் மது அருந்தியதும், அதன் பின்னர் விவசாய கிணற்றில் மர்மமான முறையில் இறந்து பிணமாக மிதந்தும் தெரியவந்துள்ளது. எனவே அவர் குடிபோதையில் தவறி கிணற்றில் விழுந்தாரா? அல்லது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem driver passed away mystery death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->