பெற்ற மகனை விஷ ஊசி செலுத்தி கொலை செய்த தந்தை.! வெளியான அதிர்ச்சி கரணம்.! - Seithipunal
Seithipunal


சேலம் அருகே புற்றுநோய் பாதித்த மகனை, விஷ ஊசி போட்டு தந்தையே கொலை செய்துள்ள சம்பவம், பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே புற்றுநோய் பாதித்த தனது மகனை விஷ ஊசி போட்டு தந்தையே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் அண்மைக்காலமாக புற்றுநோயால் துடிதுடித்து துன்பத்தை அனுபவித்து வந்துள்ளார். இதனை தந்தை பெரியசாமி பார்க்க முடியாமல் கடும் மன வேதனையை அனுபவித்து வந்துள்ளார்.

இதனையடுத்து தனது மகன் இப்படி துன்பப்பட்டு துடிதுடித்து உயிரிழப்பதற்கு பதில், மகனை கொலை செய்யலாம் என முடிவு எடுத்த பெரியசாமி, தனது மகனுக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், புற்று நோயால் பாதிக்கப்பட்ட மகனுக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்த தந்தை பெரியசாமி, உறவினர் பிரபு உள்ளிட்ட இருவரை அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

salem dad kill son for cancer


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal