சாத்தூர் அருகே கள்ளக் காதலியை கழுத்தை அறுத்து கொன்ற காதலன்! போலீசாரிடம் சிக்கியது எப்படி?!
saaththur illigal afaiyar mardur issue
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி முத்துப்பாண்டி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
ராஜேஸ்வரிக்கும், சாத்தூர் அருகே உள்ள சங்கரநத்தம் கிராமத்தை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி பரமசிவம் (51)க்கும் சில நாட்களாக பழக்கம் இருந்துள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.
இதனால் ராஜேஸ்வரி, தன் குடும்பத்தை விட்டுவிட்டு பரமசிவத்துடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜேஸ்வரி கள்ளக்காதலனை விட்டு மீண்டும் தனது கணவன் வீட்டுக்கு வந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த பரமசிவம் கடந்த 30 ஆம் தேதி ராஜேஸ்வரி வீட்டு சென்று அவரை கழுத்து அறுத்து கொலை செய்துள்ளார். சம்பவம் அறிந்து வந்த ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ராஜேஸ்வரி தனது கணவர் வீட்டுக்கு வந்ததால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் பரமசிவம் ராஜேஸ்வரியை கழுத்து அறுத்து கொன்றதாக தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பரமசிவம் மீது வழக்கு பதிவு செய்து, தலைமறைவான பரமசிவத்தை தேடி வந்தனர்.
இந்நிலையில், பரமசிவம் ரங்கப்பநாயக்கன்பட்டி கண்மாயில் பகுதியில் தலைமறைவாக பதுங்கி இருந்ததை கண்டறிந்த போலீசார், பரமசிவத்தை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
English Summary
saaththur illigal afaiyar mardur issue