செந்தமிழ் மொழிக்கு சிறப்பாக தொண்டாற்றிய தமிழறிஞர் பிறந்த தினம்.!! - Seithipunal
Seithipunal


ச.வே.சுப்பிரமணியன் :

செந்தமிழ் மொழிக்கு சிறப்பாக தொண்டாற்றிய தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் 1929ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூரில் பிறந்தார்.

மூன்றாண்டுகள் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்பு பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும், திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவராக வழிநடத்தினார்.

இவர் இலக்கிய நினைவுகள், மாந்தர் சிறப்பு, ஒன்று நன்று, கம்பன் கற்பனை, இளங்கோவின் இலக்கிய உத்திகள், தமிழ் இலக்கிய வரலாறு, சிலப்பதிகாரம் மூலம், சிலம்பும் சிந்தாமணியும், பாரதியார் வாழ்க்கை கொள்கைகள், தமிழ் நிகண்டுகள் உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

1969ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் திருவள்ளுவர் கல்லூரியை தொடங்கினார். 1985ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் 'தமிழூர்" என்ற ஊரை உருவாக்கி அங்கு வாழ்ந்தார். இவரது வீட்டின் பெயரே 'தமிழகம்".

இவர் ராஜா சர் முத்தையா செட்டியார் நினைவுப் பரிசு, ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி விருது, அவ்வை தமிழ் அருளாளர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். இந்திய சாகித்ய அகாடமியின் 'பாஷா சம்மான்" விருது பெற்ற முதல் தமிழறிஞர் என்ற பெருமைக்குரியவர்.

Tolkappiyam is the first Universal grammar in the Universe என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நூலை 2015ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். 'தமிழ் ஞாயிறு", 'சாதனைச் செம்மல் ச.வே.சு." ஆகிய தலைப்புகளில் இவருடைய வாழ்க்கை வரலாறு நூல்கள் வெளிவந்துள்ளன. 

வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்த ச.வே.சுப்பிரமணியம், 2017ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sa ve subramanian birthday 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->