பிரபல ரவுடி பென்சில் தமிழரசை சுட்டு பிடித்த போலீசார்!
Rowdy Pencil Thamilarasu arrested
கரூரில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி பென்சில் தமிழரசை கைது செய்ய சென்ற போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றார். இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் காலில் காயமடைந்தார்.
திருட்டு வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் தமிழரசனை கைது செய்ய முயன்ற போது, அவர் போலீசாரை எதிர்த்துத் தாக்கியதாக கூறப்படுகிறது. தப்பிச் செல்ல முயன்ற அவரை, காவல் ஆய்வாளர் மணிவண்ணன் துப்பாக்கியால் சுட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் காலில் காயமடைந்த பென்சில் தமிழரசனை போலீசார் கைது செய்து கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அரசுக்கு எதிராக செயல்பட்டதோடு, போலீசாரை தாக்கி தப்பியோட முயன்றதால்தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
English Summary
Rowdy Pencil Thamilarasu arrested