ரவுடி பேபி லாக்கப் பேபியாவது எப்போது?.. காவல் நிலையங்களில் குவியும் புகார்கள்.! - Seithipunal
Seithipunal


சமூக வலைத்தளங்களில் ஆபாச பேச்சுக்களால் வசைபாடி வரும் சூர்யா என்ற ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா, திவ்யா கள்ளச்சி உட்பட பலரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மாநில காங்கிரஸ் சார்பாக புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. 

டிக் டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்படுவதற்கு முன்னதாக, அதனை உபயோகம் செய்து பலரும் தங்களை பிரபலங்கள் ஆக்கிக்கொண்டனர். தமிழகத்தை பொறுத்த வரையில் டிக் டாக் செயலி மூலமாக தங்களை அடையாளப்படுத்தியவரின் பட்டியலில் ஜி.பி முத்து, ரவுடி பேபி சூர்யா, திவ்யா கள்ளச்சி உட்பட பலரும் தற்போது வரை நீடித்து வருகின்றனர்.

ஆனால், இவர்களின் ஆபாச பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான விவகாரத்தால் தற்போது பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இவர்களில் ஜி.பி முத்து தனக்கு வரும் கடிதங்களை படித்து சர்ச்சையில் சிக்குகிறார். ரவுடி பேபி திவ்யா மற்றும் அவரது இந்நாள் கணவர் என்று கூறிக்கொள்ளும் சிக்கா மீது பாலியல் தொழில் தொடர்பான குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. ஏற்கனவே திருச்சி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியாகி இருக்கிறார். 

தற்போது, ரவுடி பேபி சூர்யா ஒரு பெண்மணியை திரைப்பட சூட்டிங் மலேஷியாவில் இருக்கிறது என்று கோவாவுக்கு அழைத்துச்சென்று 15 நாட்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் குற்றச்சாட்டு முன்வந்துள்ளது. மேலும், டிக் டாக்கில் ஜி.பி முத்து டயலாக் மற்றும் இரட்டை வசனங்கள் கொண்ட விஷயங்களால் பிரபலமான இலக்கியாவையும் மலேசியாவிற்கு அழைத்துள்ளது தொடர்பான ஆடியோ வெளியாகி இருக்கிறது. 

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியை சார்ந்த ஆசிரியர் இணையவழியில் ஜி.பி முத்து, சூர்யா, சிக்கா, திருச்சி சாதனா, திவ்யா கள்ளச்சி ஆகியோர் மீது புகார் அளித்திருந்தார். தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளர் புனிதவல்லி மற்றும் சமூக ஆர்வலர் சுமித்ரா, எல்லைப்பாதுகாப்பு படை வீரர் காளிராஜ் ஆகியோர் சேர்ந்து தமிழக காவல்துறை டி.ஜி.பி அலுவலகத்தில் ரவுடி பேபி சூர்யா, சிக்கா, திருச்சி சாதனா, திவ்யா கள்ளச்சி ஆகியோரின் மீது புகார் அளித்துள்ளார். 

ரவுடி பேபி சூர்யா, சிக்கா, திவ்யா கள்ளச்சி ஆகியோர் ஏற்கனவே பிராங்க் என்ற பெயரில் ஆபாசமாக சித்தரித்த காணொளிகளை பதிவு செய்து வெளியிடுதல், சர்ச்சைக்குரிய வகையில் பேசுதல் என ஆபாச செய்கைகளை தொடர்ந்து செய்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rowdy Baby Surya Against Complaint by TN Congress and Social Activist


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal