என்டிஏ உத்தேச தொகுதி பட்டியல் வெளியீடு: அதிமுக–பாஜக கூட்டணியில் புதிய கணக்குகள்!ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா!
NDA proposed constituency list released New accounts in the AIADMK BJP alliance Amit Shah has started the game
தமிழக அரசியல் களம் தேர்தலை முன்னிட்டு நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (NDA) தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வரும் நிலையில், என்டிஏ கூட்டணிக்கான உத்தேச தொகுதி பட்டியல் ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உத்தேச பட்டியலின்படி, மொத்தம் 234 தொகுதிகளில் அதிமுக 165 தொகுதிகளில் போட்டியிடும் என கூறப்படுகிறது. கூட்டணியில் தனது முதன்மை நிலையை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் இந்த எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டதாக அரசியல் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் பாஜக 31 தொகுதிகளில், பாமக 17 தொகுதிகளில், அமமுக 9 தொகுதிகளில், தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) 4 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கூட்டணியில் உள்ள சில சிறிய கட்சிகளுக்கும் இடங்கள் ஒதுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி:
இந்த ஒதுக்கீடு நகர்ப்புறம் மற்றும் அரைநகர்ப்புற பகுதிகளை குறிவைத்து திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக வட தமிழகத்தில் வன்னியர் சமூக ஆதரவை நம்பி பாமகவுக்கு முக்கிய தொகுதிகள், தென் தமிழகத்தில் தேவர் சமூக வாக்குகளை இலக்கு வைத்து அமமுகக்கு தொகுதிகள் வழங்கப்படும் வகையில் அரசியல் கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அதேபோல் நகர்ப்புறங்களில் தனது ஆதரவை விரிவுபடுத்தும் நோக்கில் பாஜக அதிக கவனம் செலுத்தும் தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த உத்தேச பட்டியல் அதிமுகவின் உள்ளகத்தில் சற்று அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. ஏனெனில் இந்த தேர்தலில் 170 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்று அதிமுக திட்டமிட்டிருந்த நிலையில், 165 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்ற தகவல் சில நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், கூட்டணி விவகாரம் தொடர்பாக அமித்ஷா இன்று டெல்லியில் அன்புமணி ராமதாஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அந்த சந்திப்புகளுக்குப் பிறகு தான் தொகுதி பங்கீட்டின் இறுதி முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தற்போது வெளியாகியுள்ள இந்த பட்டியல் வெறும் உத்தேச பட்டியல் மட்டுமே என்றாலும், திரைமறைவில் நடக்கும் கூட்டணி அரசியல் மற்றும் கட்சிகளுக்கிடையேயான அதிகாரப் போட்டி, தமிழக தேர்தல் களம் இன்னும் பல திருப்பங்களை காணப்போகிறது என்பதை அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
English Summary
NDA proposed constituency list released New accounts in the AIADMK BJP alliance Amit Shah has started the game