காங்கிரஸில் பெரிய மாற்றம்? 17 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் இல்லை! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் பெரிய மாற்றம் வரப்போகிறது என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த தேர்தலில் காங்கிரஸ் சின்னத்தில் வெற்றி பெற்ற 17 தற்போதைய எம்எல்ஏக்களுக்கு இந்த முறை மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு ஆண்டாக காங்கிரஸ் மேலிடம், ரகசிய அமைப்புகள் மூலம் தமிழக எம்எல்ஏக்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ததாக கூறப்படுகிறது. அந்த ஆய்வில் சில எம்எல்ஏக்கள் தங்களது தொகுதிகளில் மக்களுடன் தொடர்பு குறைந்தது, கட்சியின் திட்டங்களை அடிமட்டத்துக்கு கொண்டு செல்லாதது போன்ற குறைகள் இருப்பதாக தெரியவந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால் மக்கள் ஆதரவு குறைந்தவர்களுக்கு மீண்டும் சீட் கொடுப்பது ரிஸ்க் என்று மேலிடம் கருதுகிறது.

மேலும் சில தொகுதிகளில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு எதிராக உள்ள அதிருப்தி, கூட்டணியின் வெற்றியை பாதிக்கலாம் என்று திமுக தரப்பிலிருந்தும் சுட்டிக்காட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வெற்றி வாய்ப்புள்ள புதிய முகங்களை களமிறக்க வேண்டும் என்ற முடிவுக்கு காங்கிரஸ் வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தேர்தலில் வாரிசு அரசியலை விட இளைஞர்கள் மற்றும் அடித்தள தொண்டர்களுக்கு வாய்ப்பு வழங்கும் திட்டம் குறித்து காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய தகவல்களின்படி தென் மாவட்டங்களிலும், குறிப்பாக கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி பகுதிகளிலும் வேட்பாளர் மாற்றங்கள் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

அதேபோல் கொங்கு மண்டலத்திலும் திமுகவின் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு வேட்பாளர் தேர்வில் மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கேட்டு வரும் முக்கிய தொகுதிகள்:காரைக்குடி, சிவகாசி, அறந்தாங்கி, ஸ்ரீபெரும்புதூர், வேளச்சேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், ஊட்டி, நாங்குநேரி, மயிலாடுதுறை, பொன்னேரி, சோழிங்கர், ஸ்ரீவைகுண்டம், தென்காசி, திருவாடானை, விருத்தாசலம் உள்ளிட்ட தொகுதிகள்.

இந்த பட்டியலை தமிழக காங்கிரஸ் கமிட்டி தயாரித்து விரைவில் திமுக தலைமையிடம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

17 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் கிடைக்காது என்ற தகவல் வெளியானதால், சிலர் சுயேச்சையாக போட்டியிடலாமா அல்லது வேறு கட்சிக்கு செல்லலாமா என்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து காங்கிரஸ் மேலிடம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Big change in Congress 17 sitting MLAs lose seats again So what about Selva Perundakai


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->