தனித்து களமிறங்கும் தவெக! என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்! - Seithipunal
Seithipunal


வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைகளுக்குப் பிறகு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தவெக எந்த கூட்டணியிலும் இணையாமல் தனித்து போட்டியிடும் என்று கட்சி தலைமையகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த முடிவு வெளியான பிறகு கட்சிக்குள் சில இடங்களில் அதிருப்தி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் தனது கட்சியின் முதல் பொதுக்கூட்டத்திலேயே கூட்டணிக்கான வாய்ப்பை திறந்தவாறு பேசியிருந்தார். இதனால் அதிமுக–பாஜக கூட்டணியுடன் தவெக இணையலாம் என்ற தகவல்கள் சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தன.

ஆனால் அந்த பேச்சுகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வந்து, தவெக தனித்தே தேர்தலை சந்திக்கும் என்று விஜய் தெளிவுபடுத்தியதாக கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பெரும்பாலான நிர்வாகிகள் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், தலைமை எடுத்துள்ள தனித்து போட்டியிடும் முடிவு சில நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

தவெக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சுமார் 300க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்திருந்தனர் என்று கூறப்படுகிறது.

ஆனால் தனித்து போட்டியிடும் முடிவு வெளியான பிறகு, அவர்களில் சிலர் போட்டியில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தலில் தனித்து போட்டியிடும்போது செலவுகள் அதிகரிக்கும் என்பதால் பலர் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

கட்சியின் தரப்பில் வேட்பாளர்கள் தேர்தல் செலவுகளுக்காக சுமார் ரூ.2 கோடி வரை தயாராக இருக்க வேண்டும் என்றும், சீட் பெறுவதற்கு முன்பாகவே ஒரு பெரிய தொகையை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் கூட்டணி இல்லாமல் போட்டியிடுவது பொருளாதார ரீதியாக சிரமமாக இருக்கும் என்ற காரணத்தால் சிலர் பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல மாவட்டங்களில் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டியவர்களில் சிலர் தற்போது விலகியுள்ளதாக கூறப்படுவது, தவெக தலைமையினருக்கு ஒரு புதிய சவாலாக பார்க்கப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து தவெக தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What is a separate contest Donot even bother with your ticket Tvk administrators are running away with Vijay decision


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->