ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் அதிமுக பிரமுகர்கள் கைது!
Rowdy arcot suresh murder case AIADMK admins arrested
சென்னை பட்டினப்பாக்கத்தில் பிரபல கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரபல கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி பட்டினப்பாக்கத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு மர்ம கும்பல் ஆற்காடு சுரேஷை வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தற்போது வரை 14 பேரை கைது செய்துள்ள நிலையில் அதிமுக பிரமுகர்களான சுதாகர் மற்றும் ஜான் கென்னடி ஆகியோரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஜான் கென்னடி நெல்லை மாவட்டத்தில் இருந்து கூலிப்படையை வரவழைத்து ஆற்காடு சுரேஷை கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
English Summary
Rowdy arcot suresh murder case AIADMK admins arrested