#வேலூர் || ஏடிஎம் இயந்திரத்தை கோடாரியால் உடைத்து கொள்ளை முயற்சி.!!
robbery attempt by breaking ATM machine with ax
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊசூர் பேருந்து நிறுத்தத்தில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் இன்று காலை ஊசூர் காலனியை சேர்ந்த கந்தசாமி என்பவர் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவர் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க பலமுறை முயற்சி செய்தும் பணம் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கந்தசாமி அவர் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தள்ளார்.

இதில் ஏடிஎம் இயந்திரம் முழுவதும் சுக்கு நூறாக நொறுங்கியது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கந்தசாமியை பிடித்து வைத்து அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேலூர் டவுன் டிஎஸ்பி திருநாவுக்கரசு மற்றும் அரியூர் போலீசார் உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தை பார்வையிட்டனர்.

மேலும் கந்தசாமியை அரியூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடிப்பதற்கு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முடியாத ஆத்திரத்தில் உடைத்ததாக கந்தசாமி தெரிவித்துள்ளார். ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து எந்த பணமும் திருடு போகவில்லை ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் போதையில் கந்தசாமி உடைத்துள்ளார் என போலீசார் விளக்கமளித்துள்ளனர். இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
robbery attempt by breaking ATM machine with ax