பள்ளியில் கேலி...வீட்டில் பயம்…! மனவேதனையில் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட 9ஆம் வகுப்பு மாணவி! நடந்தது என்ன...?
Ridicule at school fear at home 9th grade student driven suicide by heartache What happened
கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த சக்திவேல்குமரன் (39), தனியார் சோலார் நிறுவனத்தில் டெக்னீஷியனாக பணிபுரிகிறார். அவரது மனைவி வல்சலகுமாரி கூலி தொழிலாளியாக வேலை செய்கிறார். தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒருத்தி அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.சக்திவேல்குமரன் வேலை காரணமாக அடிக்கடி வெளியூர் செல்பவர்.
சமீபத்தில் திண்டுக்கல்லில் தங்கி வேலை செய்துவரினார். கடந்த 10-ஆம் தேதி வல்சலகுமாரி வேலைக்கு சென்றபோது, இரண்டு சகோதரிகளின் ஒருவரை தாத்தா பள்ளிக்கு அழைத்து சென்றார். அப்போது 9ஆம் வகுப்பு மாணவி மட்டும் வீட்டில் இருந்தார்.அச் சமயம் திடீரென அவருடைய உடலில் தீப்பற்றி அவள் அலறிய சத்தம் முழங்கியது. இதைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். தீக்காயத்தில் தவித்த மாணவி முதலில் வால்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு பெற்றோர்,“வீட்டில் வெந்நீர் வைத்தபோது தவறுதலாக பட்டது” என்று விளக்கம் அளித்தனர். பிறகு நிலைமை மோசமடைந்ததால், கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பல நாட்கள் போராடிய அவர், நேற்று இரவு உயிரிழந்தார்.ஆனால் சம்பவத்தின் பின்னணி அதிர்ச்சியாக வெளியேறியுள்ளது.முதலில் ‘வெந்நீர் விபத்து’ என கூறிய பெற்றோர், தற்போது தங்கள் மகள் ஆசிரியைகளின் தொடர்ச்சியான அவமதிப்பை தாங்க முடியாமல் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார் என்று அதிர்ச்சி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
சக்திவேல்குமரன் கூறுகையில்,“என் மகளை அறிவியல் ஆசிரியை வகுப்பில் அனைவர்முன்பாக வார்த்தைகளால் அவமரியாதை செய்தார். இரண்டு நாள் விடுமுறை எடுத்துவிட்டு பள்ளிக்கு வந்தபோது தமிழ் ஆசிரியை கிண்டலாகக் கேட்டதோடு, கன்னத்தில் அறைந்தார். ஆங்கில ஆசிரியை, மகளின் உருவம் மற்றும் தலைமுடியை கேலி செய்து, புத்தகங்களைத் தூக்கி எறிந்துள்ளார். மூவரும் முன்னிலையில் என் மகளை தொடர்ந்து மனஉளைச்சலுக்குள்ளாக்கினர்.
இந்த கொடுமைகளை தாங்க முடியாமல், யாரும் இல்லாத நேரத்தில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். அவர் வால்பாறை மருத்துவமனையில் இருந்தபோது போலீசார் வாக்குமூலம் எடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது என் குழந்தை உயிரிழந்துவிட்டாள். இந்தச் சாவுக்கு காரணமான மூன்று ஆசிரியர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.”இதே குற்றச்சாட்டை மாணவியும் மருத்துவமனையில் இருந்தபோது வீடியோவில் தெரிவித்திருந்தார்.
அந்த வீடியோ தற்போது வெளிவந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சக்திவேல்குமரன் மற்றும் குடும்பத்தினர் கோவை மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளதுடன், மூன்று ஆசிரியர்களுக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மாணவி வாக்குமூலத்தில் உருக்கம் தெரிவித்து,“அசிரியை அப்பா, அம்மாவிடம் எனக்கெதிராக பேசுவார்கள் என்ற பயத்தில் தீ வைத்துக் கொண்டேன். சிறிய காயம் வந்தால் அம்மா கோபப்படமாட்டார் என்று நினைத்தேன். ஆனால் இப்படியான அளவுக்கு காயம் ஏற்படும் என்று நினைக்கவில்லை…” என்று கூறியுள்ளார்.இந்த உருக்கமான வாக்குமூலம் அனைவரையும் கண்கலங்கச் செய்துள்ளது.
English Summary
Ridicule at school fear at home 9th grade student driven suicide by heartache What happened