தமிழக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த திமுக கருணாநிதி வாரிசு!!  - Seithipunal
Seithipunal


ஹாருன் ரிப்போர்ட்ஸ் இந்தியா மற்றும் ஐஐஎஃப்எல் வெல்த் நிறுவனமானது, தமிழகத்தில் ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து மதிப்புடன் இருப்பவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில், சன் டி.வி-யின் உரிமையாளர் கலாநிதி மாறன் முதலிடம் உள்ளார். சன் நெட்வொர்க்கின் உரிமையாளர் கலாநிதி மாறன் 19 ஆயிரத்து 100 கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தை பெற்றுள்ளார்.  

மேலும், இவர் இந்திய அளவில் 43- வது இடத்தை பிடித்துள்ளார். இதனை தொடர்ந்து, சோஹோ செக்யூர் நிறுவனத்தின் வெம்பு ராதா 9,900 கோடி ரூபாய் மதிப்புடன் இரண்டாவது இடத்திலும், 7,300 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் வெம்பு சேகர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். 7,100 கோடி ரூபாய் மதிப்புடன், போத்தீஸ் நிறுவனத்தின் சடையாண்டி மூப்பனார் 4வது இடத்தில் இருக்கின்றார். 

ஹாட்சன் அக்ரோ ப்ராடெக்ட்சின் (ஆரோக்கிய பால், அருண் ஐஸ்கிரீம்) சந்திரமோகன் 7 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 5- வது இடத்தை பிடித்துள்ளார். கவின் கேரின் சி.கே.ரங்கநாதன் 6- வது இடத்தை பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 5,300 கோடியாக உள்ளது. கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்களில் 62 சதவிதிதத்தினர் அதாவது 34 பேர் சென்னையில் வசிப்பவர்கள். கோவையிலிருந்து 12 பேரும் திருப்பூரிலிருந்து 4 பேரும் சேலத்திலிருந்து 3 பேரும் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Richest person in tamilnadu net worth of rs 19000 cr assets


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->