மிரட்டும் மழை - ஆட்சியர்களுக்கு பறந்த கடிதம்.!
Revenue and Disaster Management Secretary write letter to collectors
பருவமழை, இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் தொடர் கனமழை காரணமாக பதினைந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், சென்னை உட்பட 15 மாவட்ட ஆட்சியர்கள், மழைநீர் வடிகால் பணிகளை முறையாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பவும், அதனை ஆட்சியர்கள் உறுதி செய்யவும். பழைய கட்டடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Revenue and Disaster Management Secretary write letter to collectors