குப்பை சேகரிப்போர் கடின உழைப்புக்கு கௌரவம்...! 417 கோடி நிதியுடன் ஊதிய உயர்வு...!
Respect hard work garbage collectors Wage increase fund 417 crore rupees
தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்தையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க அயராது உழைத்து வரும் தூய்மைக் காவலர்கள், திடக்கழிவு மேலாண்மையின் முதுகெலும்பாக திகழ்கின்றனர்.

வீடு தோறும் சென்று குப்பைகளை சேகரித்து, மக்கும்–மக்காத கழிவுகளை தனித்தனியாகப் பிரித்து, உரமாக்குதல், நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்புதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை அவர்கள் தினமும் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களின் கடின உழைப்பை கருத்தில் கொண்டு, மாதாந்திர மதிப்பூதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாளாக எழுந்து வந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில், தமிழக அரசு முக்கிய முடிவெடுத்து, தூய்மைக் காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.5,000-இல் இருந்து ரூ.6,000-ஆக உயர்த்தியுள்ளது.
இந்த ஊதிய உயர்வை செயல்படுத்துவதற்காக, மாநில அரசு கூடுதலாக ரூ.417 கோடி நிதியை ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, கிராம தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கமும், சமூக அங்கீகாரமும் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
English Summary
Respect hard work garbage collectors Wage increase fund 417 crore rupees