கைதான கேரள கன்னியாஸ்திரிகள் ஜாமீனில் விடுவிப்பு – அரசியல் கட்சிகள் வரவேற்பு!
Release of arrested Kerala women in the constitution Political parties welcome
சத்தீஷ்கார் மாநிலத்தில் மதமாற்றம் முயற்சியால் கைது செய்யப்பட்ட கேரள கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் ப்ரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் ஆகியோருக்கு பிலாஸ்பூர் NIA சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் பகுதியை சேர்ந்த 3 பெண்களை கடத்தி, அவர்களை மதமாற்றம் செய்ய முயற்சி நடப்பதாக பஜ்ரங் தல் அமைப்பை சேர்ந்த நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், கேரளாவை சேர்ந்த பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் கன்னியாஸ்திரிகள் மற்றும் சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கு கேரளாவில் உள்ள கிறிஸ்தவ பேராயர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது.இதையடுத்து அந்த அமைப்பு விளக்கம் அளிக்கையில் வேலைக்கு அழைத்து வருவதற்காகவே அந்த 3 இளம் பெண்களை கன்னியாஸ்திரிகள் ரெயிலில் அழைத்து வந்ததாக கூறினர்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிடக்கோரி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அவசர கடிதம் அனுப்பிஎதை தொடர்ந்து ராகுல்காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
இந்நிலையில், இரண்டு கன்னியாஸ்திரிகளுக்கு பிலாஸ்பூரில் உள்ள சிறப்பு என்.ஐ.ஏ. நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. இதற்கு கேரள மாநிலத்தில் உள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் மற்றும் கிறிஸ்தவ பேராயர்கள் கூட்டமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கேரள அமைச்சர் வி. சிவன்குட்டி தனது பேஸ்புக்பதிவில்:“ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இந்த கைது அரசியல் நோக்கமுடையது என்பது தெளிவாகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரிக்கின்றன. ஒருபுறம் மவுனம், மறுபுறம் போலித்தனம் என கூறியுள்ளார் !”
English Summary
Release of arrested Kerala women in the constitution Political parties welcome