விமானத்தில் சக பயணியை தாக்கிய நபரால் அதிர்ச்சி: பயணிக்கு வாழ்நாள் தடை விதித்துள்ள இண்டிகோ நிறுவனம்..! - Seithipunal
Seithipunal


மும்பையில் இருந்து கோல்கட்டா சென்ற இண்டிகோ விமானத்தில், பயணி ஒருவர், சக பயணியை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குறித்த பயணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான சட்ட விதிமுறைகளின்படி, தாக்குதல் நடத்திய நபர், இண்டிகோ விமானங்களில் இனிமேல் பயணிக்க தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அசாமின் கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான ஹுசைன் அகமது மஜும்தார் என்பவர் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஜிம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர் இண்டிகோ விமானத்தில், மும்பையில் இருந்து கோல்கட்டா சென்று கொண்டிருந்த போது அவர் சக பயணியால் கன்னத்தில் அறையப்பட்டார்.

அவருக்கு உடல்நிலை சரியில்லாத போது காரணமே இல்லாமல் ஒருவர் தன்னை அறைந்ததால் அகமதுவுக்கு Panic attack ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உடனே பணிப்பெண்கள் அவருக்கு முதலுதவி அளித்துள்ளனர். இவ்வாறு தாக்குதல் நடத்தியவரை மற்ற பயணிகள் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த விமானம் கோல்கட்டா விமான நிலையத்தை அடைந்ததும் தாக்குதல் நடத்திய நபர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், விமானத்தில், பயணி ஒருவர், சக பயணியை தாக்கிய சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, விமான சட்ட விதிமுறைகளின்படி, தாக்குதல் நடத்திய நபர், இண்டிகோ விமானங்களில் இனி பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IndiGo bans passenger for life for assaulting fellow passenger on flight


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->