4- வது நாளாக தொடரும் மறுப்பு! கவினின் உடலை பெற்றுக்கொள்ள தந்தை விதிக்கும் கண்டிஷன்...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் ஏரல் பகுதியிலுள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் மற்றும் மனைவி தமிழ்செல்வி. இந்த தம்பதியரின் மகன் 27 வயதான கவின் என்பவர் என்ஜினீயரான சென்னையில் ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவர் நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் என்பவரது மகளை காதலித்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விஷயம் தெரிந்து ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் தம்பி சுர்ஜித், கடந்த 27-ந்தேதி கவினை பாளையங்கோட்டையில் வைத்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து சுர்ஜித்தை காவலர்கள் கைது செய்தனர். இந்த வழக்கில் கொலை செய்து கைதான சுர்ஜித்தின் பெற்றோரையும் கைது செய்யும் வரை கவினின் உடலை வாங்க மாட்டோம் என அவரது பெற்றோர் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து,கொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க 4-வது நாளாக உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.மேலும், கொலையாளி சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்ட நிலையில், தாய் கிருஷ்ணவேணியையும் கைது செய்தால் கவினின் உடலை பெற்றுக்கொள்வதாக இறந்த கவின் தந்தை சந்திரசேகர் உறுதிபட தெரிவித்துள்ளார்.இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

refusal continues 4th day father sets condition for receiving Kavins body


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->