உங்கள் குழந்தைகளை செஸ் விளையாட்டிற்காக முதலீடு செய்யுங்கள்.. ஸ்டீபன் பால்சாமி வலியுறுத்த!
Invest your children in chess games Stephen Balsami emphasizes
உங்கள் குழந்தைகளை செஸ் விளையாட்டிற்காக முதலீடு செய்யுங்கள். உங்களுக்கான பலன் கிடைக்கும் என தமிழ் மாநில சதுரங்க கழகம் பொதுச் செயலாளர் ஸ்டீபன் பால்சாமி கூறினார்.
காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் 2025 -26 ஆம் ஆண்டிற்கான சிபிஎஸ்சி செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கி நடைபெற்றது .இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக P. ஸ்டீபன் பால்சாமி (பொதுச் செயலாளர்- தமிழ் மாநில சதுரங்க கழகம்)ண் கலந்து கொண்டார். செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் சேர்மன் SP .குமரேசன் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது. துணை சேர்மன் K. அருண்குமார் கலந்து கொண்டார். பள்ளி முதல்வர் உஷா குமாரி வரவேற்புரை வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர் பேசுகையில், சிவகங்கை மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக செட்டிநாடு பப்ளிக் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சிபிஎஸ்சி செஸ் போட்டிகள் நடைபெறுவது மிகவும் சிறப்பு. அதற்கான ஏற்பாட்டினை செட்டிநாடு பப்ளிக் பள்ளி மிகவும் சிறப்பாக செய்துள்ளது என்றார். மேலும் தமது உரையில், உங்கள் குழந்தைகள் கல்வியில் சிறக்க வேண்டுமானால் நீங்கள் கட்டாயம் அவர்களை விளையாட்டுக்களில் ஈடுபடுத்த வேண்டும். முக்கியமாக செஸ் மிகவும் உதவிகரமாக இருக்கும். மூளையின் அதி வேகத்திறனை அதிகரிக்க செஸ் உதவும் என்றார். உங்கள் குழந்தைகளை செஸ் விளையாட்டிற்காக முதலீடு செய்யுங்கள். உங்களுக்கான பலன் கிடைக்கும் என்றார்.
செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் துணை சேர்மன் அருண்குமார் பேசுகையில், செஸ் விளையாடுதல் என்பது மிகவும் அறிவார்ந்த விஷயம். செஸ் விளையாடுவது மூளையின் செயல்பாட்டை அதிகப்படுத்துகிறது. செஸ் விளையாட பொறுமையும், விடாமுயற்சியும் தேவை. மேலும் செஸ் விளையாடுவது நினைவாற்றலை வளர்க்கக் கூடியது என்றார் .மேலும் அவர் பேசுகையில், செஸ் விளையாட்டு வீரரான குகேஷ் ஒரு அற்புதமான சதுரங்க வீரர். அவரது சாதனைகள் இந்தியாவிற்கும், சதுரங்க உலகிற்கும் ஒரு பொக்கிஷமாக உள்ளது. குகேஷின் வெற்றி இந்திய சதுரங்க வீரர்களுக்கு ஒரு உத்வேகமாக உள்ளது என்றார். செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் துணை முதல்வர் பிரேம சித்ரா நன்றியுரை வழங்கினார். நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது. செஸ் விளையாட்டு போட்டியின் முதல் நாள் இரண்டு சுற்றுகள் நடைபெற்றன.இந்நிகழ்வில் விஜயவாடா மற்றும் சென்னை பகுதிகளில் உள்ள 165 பள்ளிகளிலிருந்து சுமார் 1200 மாணவர்கள் பதிவு செய்து செஸ் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். மூன்று நாள் நிகழ்வாக இப்போட்டிகள் நடைபெற உள்ளது.
English Summary
Invest your children in chess games Stephen Balsami emphasizes