திருவள்ளூரில் இரண்டாவது சம்பவம்.. வடமாநில இளைஞர்கள் அத்துமீறல்!
Second incident in Tiruvallur Northern youth misbehavior
திருவள்ளூரில் ஆரம்பாக்கம் சிறுமி , பாலியல் வன்கொடுமை சம்பவம் அடங்குவதற்குள், அதே மாவட்டத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் பகுதியில் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. கனகம்மாசத்திரம் அருகே உள்ள வி.ஜி.கே.புரம் பகுதியில், சாலை மேம்பாட்டு பணிகளில் 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அப்பகுதியில் தற்காலிக குடில்கள் அமைத்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை 17 வயது சிறுமி தனியாக நடந்து சென்றபோது, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹெக்ரமுல் அலி, சிறுமியின் வாயைப் பொத்தி வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த சிறுமி தப்பித்துபோய்க் கிராம மக்களிடம் தகவல் தெரிவித்தார்.
சம்பவம் குறித்த தகவலையடுத்து, பொதுமக்கள் ஹெக்ரமுல் அலியை பிடித்து சரமாரியாக தாக்கி, கனகம்மாசத்திரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சிறுமியை அசாம் மாநிலத்தவர் ராஜு பிஸ்வகர்மா பாலியல் வன்கொடுமை செய்த வழக்கின் அதிர்ச்சி வாடுபடுவதற்குள், மேலும் ஒரு அதே மாதிரியான சம்பவம் நிகழ்ந்திருப்பது மக்களிடையே கடும் பதட்டத்தையும், வடமாநிலத் தொழிலாளர்களின் கட்டுப்பாடற்ற நடத்தை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
English Summary
Second incident in Tiruvallur Northern youth misbehavior