நாளை நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்! வாரத்திற்கு மூன்று என்ற வீதம் 1164 மருத்துவ முகாம்கள்! - ராதாகிருஷ்ணன்
Stalins health plan tomorrow 1164 medical camps three per week Radhakrishnan
சென்னையில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை பெருமையுடன் தொடங்கி வைக்கிறார். இதில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் 1,256 முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது. இந்த திட்டத்தில் இதயம், அறுவை சிகிச்சை, பொது மருத்துவ நிபுணர்கள் இந்த முகாம்களில் கலந்துகொள்கின்றனர்.

இந்நிலையில் கூடுதல் தலைமைச் செயலாளர் ''ராதாகிருஷ்ணன்''அவர்கள், முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
ராதாகிருஷ்ணன்:
மேலும் இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது," சென்னையில் 15 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். ஒரு வட்டாரத்திற்கு 3 மருத்துவ முகாம்கள் வீதம் 1164 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
மருத்துவ முகாம்களில் சோதனை முடிவுகள் அன்று மாலையே அளிக்கப்படும். சுகாதாரத்துறை திட்டமாக இருந்தாலும் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட உள்ளன.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்பர் . உப்பு, சர்க்கரை, எண்ணெயை சற்று குறை என்ற விழிப்புணர்வு நிகழ்வுகளும் முகாம்களில் நடத்தப்படும்" என்று முகாம்களின் முக்கிய பங்களிப்பு குறித்து தகவல் தெரிவித்தார்.
English Summary
Stalins health plan tomorrow 1164 medical camps three per week Radhakrishnan