'உங்களுடன் ஸ்டாலின்', 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டங்களுக்கு தடையா? உயர்நீதிமன்றம் அதிரடி!
Unkaludan stalin case chennai hc
சென்னை உயர்நீதிமன்றம், அரசின் சமூக நலத்திட்டங்களில் முதல்வரின் பெயர் மற்றும் புகைப்படம் பயன்படுத்தலாம் என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கேற்ப, 'உங்களுடன் ஸ்டாலின்', 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம் மற்றும் வழக்கறிஞர் இனியன் தாக்கல் செய்த மனுவில், திமுக சின்னம் மற்றும் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரின் படங்கள் அரசு விளம்பரங்களில் இடம்பெறுவது, அரசியல் நோக்கத்துடன் கூடியது என்றும், அரசு நிதி கட்சிப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்டது. 2026 தேர்தலை முன்னிட்டு, இந்த திட்டங்கள் திமுகவினரால் பிரச்சாரமாக பயன்படுத்தப்படுவதாகவும், சட்டவிதிகளை மீறுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
மனுவில் பதிலளித்த அரசு, "உச்சநீதிமன்றம் அரசுத் திட்டங்களில் முதல்வரின் படத்தை பயன்படுத்தலாம் எனத் தீர்மானித்துள்ளது" என்று விளக்கியது. திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், "அம்மா திட்டங்கள், நமோ திட்டம், ஜெகன் திட்டம் போன்றவையும் இதே போன்று செயல் பட்டுள்ளன" என்று வாதிட்டார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு, சட்டவிதிகளுக்கேற்ப முதல்வரின் பெயர் பயன்படுத்தலாம் எனத் தெளிவுபடுத்தி, தமிழக அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் திமுகவிடம் 10 நாட்களில் பதில் கேட்டு விசாரணையை ஒத்திவைத்தது.
English Summary
Unkaludan stalin case chennai hc