எடப்பாடியார் நாம் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் - ஆர். பி உதயகுமார் அசத்தல் பேச்சு.!
rb udhayakumar speech about z plus guard to edappadi palanisamy
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி உதயகுமார் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் கோட்டை மேடு பகுதியில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். அதன் பின்னர் அவர் தெரிவித்ததாவது:-
"கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சென்னையில் உள்ள வீட்டிற்கும், சேலத்தில் உள்ள வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. எடப்பாடியார் நாம் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாகும். ஏற்கனவே அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு இருந்தது.
இதனைத் தொடர்ந்து இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கழக அம்மா பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கோரிக்கை வைக்கப்பட்டது. இதேபோல், பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்.
அந்தக் கோரிக்கைகளை ஏற்று மத்திய உள்துறை அமைச்சகம் இசட் பிளஸ் பாதுகாப்பை எடப்பாடியாருக்கு வழங்கியுள்ளது. யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்பது போல விரைவில் முதலமைச்சராக வரவுள்ள எடப்பாடியாருக்கு இன்றைக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
எட்டு கோடி மக்களின் பாதுகாவலர் எடப்பாடியாருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசுக்கு கழக அம்மா பேரவையின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
rb udhayakumar speech about z plus guard to edappadi palanisamy