பட்டப்பகலில் பலாத்காரம்! சுற்றிவளைத்த பொதுமக்கள்!! - Seithipunal
Seithipunal


சமீப காலமாகவே பெண்கள் மீதான பலாத்காரம் அதிகரித்துவருகிறது. கயவர்கள் பிஞ்சு குழந்தைகளிடமும் அத்து மீறுகின்றனர். என்னதான் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும் காவல்துறையினருக்கு பாலியல் குற்றங்களை தடுப்பது  சவாலாகவே உள்ளது.

அந்த வகையில், சேலம் மன்னார்பாளையம் பகுதியில் உள்ள சத்யா நகர் என்ற இடத்தில கடந்த 15 ம்   தேதி  பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந் போது, பட்டபகலில் வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து அவரை கீழே தள்ளி பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண் வீராணம் காவல்நிலையத்தில்  புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமேராக்களை போலீசார் தீவிரமாக ஆய்வுசெய்தபோது, மன்னார் பாளையத்தை அடுத்த அள்ளிக்கோட்டையை சேர்ந்த கண்ணன் என்பவர்தான்  பலாத்காரத்தில்  ஈடுபட்டது கண்டறியப்பட்டது. அவரை கைது செய்து விசாரித்தபோது, அவர் , மது, கஞ்சா போன்ற போதை பழக்கத்திக்கு  அடிமையாகி, மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிவந்துள்ளது.

இதற்கு முன்பு அவர் வயதான மூதாட்டிகளிடம்  அத்துமீறியிருப்பதும்  தெரியவந்துள்ளது. இதையடுத்து, இவரை  சிறையில் அடைப்பதா? அல்லது மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதா என்பது  குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த பலாத்கார விவகாரம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rape at salem in day time hand over to police


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->