நண்பனை போதையில் போட்டுத்தள்ளிய கொடூரம்.. காதல் திருமணம் செய்த நான்கே மாதத்தில் பரிதாபம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தை அடுத்துள்ள நெமிலி கீழவெங்கடாபுரம் கிராம பகுதியை சார்ந்தவர் தனஞ்செழியன். இவரது மகனின் பெயர் பாரதி தாசன் (வயது 23). காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத்தில் பாரதிதாசன் கோழிப்பண்ணை நடத்தி வந்த நிலையில், அங்குள்ள அங்கம்பாக்கம் கிராமத்தை சார்ந்த சங்கீதா (வயது 20) என்ற பெண்மணியை காதலித்துள்ளார். 

இவர்கள் இருவரும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னதாக திருமணம் செய்து கொண்ட நிலையில், தம்பதிகள் இருவரும் படாளம் கிராமத்தில் வசித்து வந்துள்ளனர். நேற்று பாரதிதாசன் அவரது மனைவியை அழைத்துக்கொண்டு அங்குள்ள கீழ் வெங்கடாபுரம் கிராமத்திற்கு சென்றுள்ளார். பின்னர் இரவு 10 மணிக்கு வெளியே சென்ற பாரதி வெற்றிக்கு திரும்பவில்லை. 

இந்நிலையில், அதே பகுதியில் இருக்கும் தனசேகர் என்பவரது ரைஸ்மில்லில் பாரதிதாசன் பிணமாக கிடந்துள்ளார். இந்த விஷயம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

இந்த விசாரணையில், பாரதிதாசன் தனது நண்பர்களான சதீஷ் உட்பட 3 பேருடன் சேர்ந்து மது அருந்திய நிலையில், போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை அரங்கேறியுள்ளது. மேலும், சதீஷிற்கு போதை விசாரணையின் போதும் போதை தெளியாத அளவிற்கு மது அருந்தியுள்ளதால், போதை தெளியும் வரை காத்திருந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாரதிதாசனின் மனைவி செய்வதறியாது கணவனை இழந்து கண்ணீரில் மிதந்து வருகிறார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranipet youngster murder police investigation going on


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal