எரிபொருள் சாதனையில் இந்தியா...! 1 லட்சம் பங்குகள்... உலகில் 3-ம் இடம்...! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் எரிபொருள் விற்பனை கட்டமைப்பு வரலாற்றுச் சாதனை ஒன்றை எட்டியுள்ளது. நாட்டின் வாகன எரிபொருள் விற்பனை நிலையங்கள் (Petrol Pumps) எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டி, புதிய மைல்கல்லை பதிவு செய்துள்ளது.

2024 நவம்பர் மாத இறுதி நிலவரப்படி, இந்தியா முழுவதும் மொத்தம் 1,00,266 எரிபொருள் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளதாக பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த சாதனையின் மூலம், உலகிலேயே அதிக பெட்ரோல் பங்குகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தையும், சீனா இரண்டாம் இடத்தையும், இந்தியா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

பின்னோக்கிப் பார்த்தால், 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 50,451 பெட்ரோல் பங்குகள் மட்டுமே இருந்தன. கடந்த ஒரு தசாப்தத்தில், இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்ததும், கிராமப்புறங்களிலும் எரிபொருள் சேவைகள் எளிதாகக் கிடைக்க வேண்டும் என்ற அரசின் நோக்கமும் இந்த விரிவாக்கத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.ஒரு காலத்தில் நகரங்களுக்கு மட்டுமே மையமாக இருந்த பெட்ரோல் பங்குகள், தற்போது கிராமப்புறங்களிலும் வலுவான அடையாளத்தைப் பதித்துள்ளன.

10 ஆண்டுகளுக்கு முன்பு மொத்த பெட்ரோல் பங்குகளில் கிராமப்புற பங்கு 22% மட்டுமே இருந்த நிலையில், தற்போது அது 29% ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவின் எரிபொருள் சந்தையில் அரசுத் துறை நிறுவனங்களின் ஆதிக்கம் தொடர்கிறது. மொத்த பெட்ரோல் பங்குகளில் 90%க்கும் மேற்பட்டவை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இதற்கு அடுத்தபடியாக நாயாரா எனர்ஜி, ரிலையன்ஸ்–பிபி, ஷெல் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் மீதமுள்ள பங்குகளை கொண்டுள்ளன.முக்கியமாக, இன்றைய பெட்ரோல் பங்குகள் பெட்ரோல், டீசல் விற்பனை மட்டுமின்றி, சிஎன்ஜி, மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் வசதி போன்ற பல்வேறு சேவைகளை வழங்கும் ‘எரிசக்தி மையங்களாக’ (Energy Hubs) மாற்றம் பெற்று வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி, மூன்றில் ஒரு பங்கு நிலையங்களில் மாற்று எரிபொருள் வசதிகள் செயல்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India sets fuel efficiency record 100000 shares 3rd place world


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->