பணத்திற்கு பேயாய் அலைந்த கேடுகெட்ட குடும்பம்.. இறைவனாய் தந்த இன்ப அதிர்ச்சி இல்லறம்.. ஆற்காட்டில் நெகிழ்ச்சி.!! - Seithipunal
Seithipunal


இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியை சார்ந்தவர் ரமேஷ் - மோகனமாலா. இவர்களது மகள் வனிதா (வயது 25). இவர் முதுகலை பட்டப்படிப்பு பயின்று முடித்துள்ளார். இவருக்கும், ஆற்காடு அருகேயுள்ள இராமநாதபுரம் பகுதியை சார்ந்த சுப்பிரமணி என்பவரது மகனான சசிகுமார் என்கிற பரசுராமருக்கும் (வயது 31), திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதனையடுத்து கடந்த மாதம் 10 ஆம் தேதி திருமண நிச்சயமும் நடைபெற்ற நிலையில், நிச்சியத்தின் போது பெண்ணிற்கு 20 சவரன் நகைகள், மாப்பிள்ளை 5 சவரன் நகை மற்றும் இரு சக்கர வாகனம் தருவதாக பெண் வீட்டார் சார்பில் பேசப்பட்டுள்ளது. இவர்களின் திருமணம் இன்று ஆற்காட்டில் நடைபெறும் என்று பேசிமுடிக்கப்பட்ட நிலையில், பெண் வீட்டார் வரதட்சணையில் வயிறை வளர்க்க நினைத்த மணமகனின் தாயார் புவனேஸ்வரி (வயது 63) மற்றும் உறவினர்கள் அதிக நகை கேட்டுள்ளனர். 

மேலும், மணப்பெண்ணிற்கு 50 சவரன் நகை மற்றும் ரூ.2 இலட்சம் ரொக்கம் வேண்டும் என்று பணப்பிசாசுகள் போல பெண் வீட்டாரை வற்புறுத்தியுள்ளார். இதனால் இறுதிக்கட்ட நேரத்தில் பெண் வீட்டார் செய்வதறியாது திகைத்த நிலையில், பணப்பிசாசுகளின் தொந்தரவால் திருமணம் தடைபட்டுள்ளது. மேலும், திருமணத்திற்கு முன்னதாகவே இப்படி இருந்தால், திருமணத்திற்கு பின்னர் பெண் எவ்வுளவு அவதியுறுவார் என்று யோசனை செய்து, குறித்த தேதியிலேயே மற்றொரு மணமகனை பெண் வீட்டார் தேடியுள்ளனர்.  

குடும்பத்தினர் அனைவரும் ஆலோசித்து, ஆற்காடு பகுதியை சார்ந்த அப்பாதுரை என்பவரின் மகனான சசிகுமார் (வயது 30), திடீர் மாப்பிளையாக மாறினார். இதன்படி, திருமணம் நிச்சயம் செய்தபடி வனிதா - சசிகுமாரின் திருமணம் இன்று நடைபெற்று முடிந்தது. மேலும், கூடுதல் வரதட்சணை கேட்ட கேடுகெட்ட பிசாசுகள் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranipet girl marriage Successfully completed with good Family


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
Seithipunal