தலித் சமூதாயத்திற்கு எதிராக ரங்கசாமி செயல்படுகிறார்.. நாராயணசாமி கடும் தாக்கு!
Rangasamy is acting against the Dalit community Narayanasamys severe attack
பஜகாவோடு கை கோர்த்துக்கொண்டு தலித் சமூதாயத்திற்கு எதிராக முதலமைச்சர் ரங்கசாமி செயல்படுகிறார் என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக அரசு தாழ்த்தப்பட்ட மக்களை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டியும், தலித்துக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியின் SC/ST பிரிவு சார்பில் சட்டசபை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று மாநில அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:
பஜகாவோடு கை கோர்த்துக்கொண்டு தலித் சமூதாயத்திற்கு எதிராக முதலமைச்சர் ரங்கசாமி செயல்படுகிறார்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தலித்சமூதாயத்திற்குஅனைத்துதிட்டங்களையும்செயல்படுத்தியது.நாட்டிலேயே ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தலித் மக்களுக்கு இலவச கல்வி கொடுத்தது கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான்.
எளிமையான முதலமைச்சர் என சொல்லிக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழுகிறார் முதலமைச்சர் ரங்கசாமி.தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தூக்கி எரியவில்லை என்றால் புதுச்சேரிக்கு பேராபத்து ஏற்படும் என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்தார்.
English Summary
Rangasamy is acting against the Dalit community Narayanasamys severe attack