மதுபோதையில் மனைவிக்கு பாலியல் தொல்லை.. ஆசைக்கு இணங்க மறுத்தால் அடி, உதை.. வீட்டோடு எரிந்த கணவன்.! - Seithipunal
Seithipunal


மதுபோதையில் தொல்லை கொடுத்து வந்த மாற்றுத்திறனாளி கணவரை, மனைவி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூனுசுவலவை கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி மல்லிகா. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். 

மாற்றுத்திறனாளியாக இருந்து வரும் நிலையில் முனியசாமி, எந்த வேலைக்கும் செல்லாமல் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு சுற்றித்திரிந்து வந்துள்ளார். கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்த மல்லிகாவிடமும் மது குடிக்க பணம் கேட்டு சண்டை போட்டு வந்துள்ளான். 

அவ்வப்போது மதுபோதையில் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில், இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல சண்டை ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த முனியசாமி மனைவியின் முகத்தில் கடித்தும் வைத்துள்ளான். 

இதனால் ஆத்திரமடைந்த மல்லிகா கணவனை கொலை செய்துவிடலாம் என்று முடிவு செய்து, குழந்தைகளை தாயாரின் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார். பின்னர் முனியசாமி போதையில் அசந்து தூங்கும்போது, வீட்டோடு சேர்ந்து கணவனை மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளார். 

போதையில் உறங்கிக்கொண்டிருந்த முனியசாமி எழுந்து வர இயலாமல், சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியான நிலையில், கணவனை கொலை செய்த மல்லிகா நள்ளிரவில் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு கணவர் இறந்து விட்டதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார். 

காவல் துறையினரின் விசாரணையின்போது, முனியசாமியின் கொலைக்கான மர்மம் விலகியுள்ளது. மேலும், மதுபோதையில் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த காமுகன், ஆசைக்கு இணங்க மறுத்தால் அடித்து துன்புறுத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளான். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக முனியசாமியை மல்லிகா கொலை செய்துள்ளதாகவும் உறுதியானது. இதனையடுத்து மல்லிகா சிறையில் அடைக்கப்பட்டார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram Woman Murder Husband due to Sexual Torture Police Arrest Wife


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal