ராமநாதபுரம் : பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது அரசு பேருந்து மோதி 2 பேர் பலி.!
Ramanathapuram Bus accident 2 Womens death
ராமநாதபுரத்தில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி இன்று மதியம் 1.30 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்து ராமநாதபுரம் வழியாக சென்னை சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் ராமநாதபுரம் கீழக்கரை தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்து வந்து கொண்டிருந்தபோது சாலையின் எதிரே தூத்துக்குடிக்கு மீன் ஏற்றுக்கொண்டு வாகனம் ஒன்று சென்றுள்ளது. அப்போதே மீன் ஏற்றுக் கொண்டு சென்ற வாகனம் மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முயற்சித்த போது அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பேருந்து நிலையத்தை உடைத்து கொண்டு அருகே இருந்த கல்லூரி தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டும் கல்லூரிக்குள் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கொடூரத்தில் கல்லூரி அருகே உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் பெருந்துக்காக காத்திருந்த 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Ramanathapuram Bus accident 2 Womens death