31 ஆண்டுகால போராட்டத்திற்கு பின்னர் வெளிவந்த நளினி.!  - Seithipunal
Seithipunal


நேற்று உச்சநீதிமன்றம் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் நளினி உட்பட 6 பேரை விடுதலை செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியது. பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இவர்களுக்கும் பொருந்தும் என்று கூறி நீதிபதிகள் இவர்கள் இருவரை மட்டுமல்லாமல், இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஆறு பேரையும் விடுதலை செய்தனர். 

இது தொடர்பாக கடந்த 31 ஆண்டு காலமாக அவர்கள் நடத்தி வந்த சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த உத்தரவை உச்சநீதிமன்ற சட்டப்பிரிவு 142 ஐ பயன்படுத்தி பிறப்பித்துள்ளது. 

உச்சநீதிமன்ற உத்தரவின் நகல்கள் கிடைத்ததையடுத்து விடுதலைக்கான நடைமுறைகள் நிறைவு பெற்றது. பின்னர், இன்று மாலை சிறையில் இருந்து நளினி விடுதலை செய்யப்பட்டார். வேலூர் மத்திய சிறையில் இருந்து முருகன் சாந்தன் உள்ளிட்டோரும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajivgandhi murder case nalini release today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->