ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மீண்டும் கவன குறைவு? ஆஞ்சியோவுக்கு வந்த பெண்ணின் கை அகற்றும்! - Seithipunal
Seithipunal


சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஜீனாத் என்பவரின் மனைவி ஜோதிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் கடந்த 15ம் தேதி ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ரத்தநாள அடைப்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்ததால் ஆஞ்சியோ கிராம் பரிசோதனை செய்ய திட்டமிட்டனர். 

அதற்காக ஜோதியின் வலது கை மற்றும் இரண்டு கால்கள் வாயிலாக நுண்துளையிட்டனர். அப்போது அவருக்கு ரத்த உறைதல் ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து ஆஞ்சியோ கிராம் பரிசோதனை செய்தனர். அதில் இதய ரத்தநாள அடைப்புகள் பெரிய அளவில் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

ஆனால் அவருக்கு ரத்த உறைதல் காரணமாக வலது கை மற்றும் இரண்டு கால்கள் மிகவும் மோசமடைந்து கருப்பு நிறத்தில் மாறியது. ஜோதியின் உயிரை காப்பாற்ற அவரின் வலது கையை அறுவைசிகிச்சை மூலம் டாக்டர்கள் நேற்று அகற்றினர். இதுகுறித்து பேசிய ஜோதியின் கணவர் தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ கிராம் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அரசு மருத்துவமனைக்கு வந்தோம். ஆனால் ஆஞ்சியோ கிராம் செய்யும் போது கை, கால்களில் ரத்த உறைதல் ஏற்படுவதாக கூறி சதைகளை அறுத்தனர்.

இப்போது உயிரை காப்பாற்ற வலது கையை அகற்றியுள்ளனர். கால்களிலும் ரத்தம் சீராகவில்லை என்றால் காலையும் அகற்ற வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளனர். இதய பரிசோதனைக்காக வந்தால் கை, கால்களை அகற்றுகின்றனர்.

அரசு மருத்துவர்கள் தவறான மருந்தையோ அல்லது கவனக்குறைவான சிகிச்சையையோ அளித்துள்ளனர். அதனால்தான் இவ்வாறு நடந்துள்ளது.  எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என வேதனையுடன் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த குழந்தை உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RajivGandhi hospital removed woman hand who came for angio test


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->