" வா தலைவா வா, உன்னால் தான் முடியும் " ரஜினியை அரசியலுக்கு அழைத்து பொதுமக்கள் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


நவம்பர் மாதம் 1 ஆம் தேதி தமிழகம் மாநிலமாக உருவாக்கப்பட்டது. இந்த தினத்தை தமிழக நாளாக சிறப்பித்து, வருடம் முழுவதும் கொண்டாடி வருகிறோம். அந்த வகையில், தமிழகம் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டு 64 வருடங்கள் ஆகிவிட்டது. 

இன்றைய தினத்தில் பலரும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, தமிழகம் தனி மாநிலமாக அமைய காரணமாக இருந்த பலருக்கும் நன்றிகளை மரியாதையாக செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ரஜினியை அரசியலுக்கு அழைத்து தமிழக தினத்தில் அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளது நடைபெற்றுள்ளது. 

திரையுலகின் உச்சநட்சத்திரம் என்றும், சூப்பர்ஸ்டார் என்றும் அழைக்கப்படும் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து தற்போது வரை எந்த விதமான தகவலையும் வெளியிடாமல் இருந்து வந்த நிலையில், ரஜினி வெளியிட்டதாக அறிக்கையொன்று இணையத்தில் பெரும் வைரலானது. 

பின்னர் இந்த அறிக்கை தொடர்பான விளக்கத்தை ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். ரஜினி அரசியலுக்கு வருகை தர வேண்டும் என்று பல வருடங்களாக அவரின் ரசிகர்கள் தொடர் கோரிக்கை வைத்து வரும் நிலையில், 2021 ஆம் வருட தேர்தலில் கட்டாயம் நாம் களம்காண்போம் என்று சூட்சகமாக ரஜினி தெரிவித்த கருத்தை மனிதில் வைத்து, ரஜினி மக்கள் மன்றம் சார்பாக பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.

தற்போது மதுரை, ராமேஸ்வரம், திண்டுக்கல் மற்றும் கோவை மாநகர் பகுதிகளில் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ரஜினியை அரசியலுக்கு வரவேற்று சுவரொட்டியை ஒட்டியுள்ளனர். இது குறித்த சுவரொட்டியில், " தமிழகத்தின் கடைசி நம்பிக்கையே, மக்களை காக்க உன்னால் மட்டுமே முடியும் ", " ஆட்சி, அரசியல் மாற்றத்தை விரும்பும் மக்கள் ", எங்கள் ஓட்டு உங்களுக்குத்தான், காலத்தின் கட்டாயத்தை சீக்கிரம் ஏற்றுக்கொள்ளுங்கள். வா தலைவா வா " என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajinikanth Fans and Public Create Poster to Invite Rajinikanth Politics


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->