இயக்குநர் மனோபாலா மறைவு! நடிகர் ரஜினி, வடிவேல், டிடிவி தினகரன் இரங்கல் ! - Seithipunal
Seithipunal


நடிகரும், இயக்குநருமான மனோபாலா இன்று உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 69.

நடிகர் மனோபாலாவின் மறைவுக்கு திரைத்துறையினரும், அரசியல் கட்சி பிரமுகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், அருமை நண்பர் மனோபாலா உடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.

நடிகர் வடிவேலு விடுத்துள்ள இரங்கல் செய்தி : நடிகர் மனோபாலாவின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அனைவரிடமும் அன்பாக பழக கூடிய மனோபாலாவின் மரணம் எனக்கு தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

ம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "நடிகரும், இயக்குநருமான மனோபாலா உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வேதனையடைந்தேன்.  

உதவி இயக்குநராக திரையுலகில் கால் பதித்து, தற்போதைய தலைமுறை நடிகர்களுக்கு இணையாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர  பாத்திரங்களில் திறம்பட நடித்து ரசிகர்களை மகிழ்வித்தவர்.  மனோபாலா அவர்களின்  மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடு செய்யமுடியாத  பேரிழப்பாகும்.

மனோபாலா மறைவால் வாடும் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், சக திரை கலைஞர்களுக்கும் மற்றும்  ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini ttv vadivel mourning to Manobala death


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->