வெளியானது ராஜராஜ சோழனின் புதிய தோற்றம்.! - Seithipunal
Seithipunal


வெளியானது ராஜராஜ சோழனின் புதிய தோற்றம்.!

உலக புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று தஞ்சை பெரிய கோவில். இந்தக் கோவில் கருவறையைச் சுற்றியுள்ள சாந்தார அறையில், ராஜராஜன் காலத்தில் வரையப்பட்ட ராஜராஜன் ஓவியம் மற்றும் குஜராத் சாராபாய் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்ட ராஜராஜன் சிலை மற்றும் செப்பேடு, மானம்பாடி கோவில் சிற்பம் ஆகியவற்றின் அடிப்படையில், புதிதாக ராஜராஜ சோழனின் ஓவியத்தை, சோழ சேனை அமைப்பு உருவாக்கியுள்ளது.

இந்த ஓவியத்தை திருச்சி மாவட்டம், சோழமாதேவி கோவிலில், தஞ்சாவூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தெய்வநாயகம், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், முன்னாள் ஐ.ஏ.எஸ்.,அதிகாரியுமான மு.ராஜேந்திரன் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் வெளியிட்டனர்.

இதுகுறித்து, சோழ சேனை அமைப்பின் தலைவர் அருண்மொழி தெரிவித்ததாவது: "முதன்முதலில் தமிழகத்தை விரிவுபடுத்திய அரசன் என்றால் அது ராஜராஜ சோழன் தான்.

அவர், தேசப்பற்றும், தெய்வப்பற்றும் நிறைந்தவராகவும், அனைவருக்கும் பொதுவான ஆட்சி செய்தவராகவும் இருந்துள்ளார். அவர் குறித்த தவறான தகவல்களை தடுக்கும் எண்ணத்துடன் தான், இந்த படம் வரையப்பட்டது.

இந்த படத்தை, ராஜராஜ சோழன் மன்னராக பதவியேற்ற ஆடி புனர்பூச நாளில் வெளியிட்டுள்ளோம். இந்த படத்தை, ஓவியர்களான பிரேம் டாவின்சி, தெய்வா, அருண்மொழி உள்ளிட்டோர் உருவாக்கினர்.

இந்த ஓவியத்தில், தமிழர்களின் உயரத்துடனும், தோல் நிறத்துடனும் ராஜராஜன் உள்ளார். அவர் மார்பில் விழுப்புண்களும், கையில் சோழர்களின் மலரான அத்திப்பூவும் உள்ளது.

காலில் வீரக்கழல், சன்னவீரம் அணிந்த மார்பில் முப்புரி நுால், தலையில் மிகப்பெரிய கொண்டை, மீசை, சிறுதாடி,  காது, என்று பல நுண்ணிய அடையாளங்களுடன், இந்த படம் வரையப்பட்டுள்ளது" என்று அவர்தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

raja raja cholan new photo release


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->