புயல், மழை, வெள்ளம் - பீதியில் புதுக்கோட்டை மக்கள்.!  - Seithipunal
Seithipunal


வருகிற 27 மற்றும் 28 ம் தேதிகளில் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் பெய்ததுபோல பெருமழை புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்ய வாய்ப்பு இருப்பதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீசியான தகவல் ஒன்று பரவி வருகிறது. இதனால், அம்மாவட்டத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

இந்த போலித் தகவல் குறித்து புதுக்கோட்டை மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் "கடந்த 21.12.2023 அன்று ஒரு நபர் வாட்ஸ்அப் வழியாக எதிர்வரும் 27 மற்றும் 28 உள்ளிட்ட தேதிகளில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அதிக மழை பெய்யும். அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தகவல் வெளியிட்டுள்ளார். 

ஆனால் வானிலை எச்சரிக்கை மையத்திலிருந்து அவ்வாறான தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இது போன்ற அதிகாரபூர்வமில்லாத தகவலை எண்ணி பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை. ஏதேனும் வானிலை எச்சரிக்கை வரப்பெற்றால் உடனடியாக செய்தி, ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது. 

இருப்பினும், வதந்தி பரவிய அளவுக்கு இந்த உண்மைத் தகவல் மக்களிடம் சென்று சேரவில்லை. அதனால் இன்னும் மக்கள் மத்தியில் புயல், மழை, வெள்ளம் குறித்த பயம் அகலவில்லை


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain, floods, cyclone in putukottai fake news viral


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->