சென்னையில் ரெயில்வே பாதுகாப்பு படை அதிரடி! விரைவு ரெயில்களில் 12 கிலோ கஞ்சா, 15 கிலோ தடைப்பட்ட பான் மசாலா பறிமுதல்...! - Seithipunal
Seithipunal


சென்னையின் பரபரப்பான எழும்பூர் ரெயில் நிலையம் பகுதியில் நேற்று ரெயில்வே பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

அப்போது, அயோத்தியா காண்ட்–ராமேசுவரம் விரைவு ரெயில் மூலம் வந்த பயணியிடம் இருந்து சுமார் 15 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அந்த நபருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, புவனேஸ்வர்–புதுச்சேரி விரைவு ரெயில் மீது நடத்தப்பட்ட சோதனையில், பெண் பயணி ஒருவரிடம் இருந்து 7 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.

விசாரணையில், அவர் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த மோகனா (25) என்பதும், பீகாரிலிருந்து கஞ்சா கடத்தி வந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, அவரை காவலர்கள் கைது செய்து, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொருட்களுடன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், அதே ரெயிலின் மற்றொரு பெட்டியில் கேட்பாரற்று கிடந்த சந்தேகப்பையை சோதனை செய்தபோது, அதற்குள் மேலும் 5 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.

இவ்வாறு மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்ட 12 கிலோ கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் என தெரிவிக்கப்படுகிறது.இந்த தொடர் சோதனை நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோத கடத்தலுக்கு எதிராக காவலர்கள் தீவிரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Railway Protection Force action Chennai 12 kg ganja and 15 kg banned pan masala seized express trains


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->