சாத்தான்குளம் : பிரியாணியில் புதினா போல் கிடந்த பூரான் - வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பகுதியில் பிரியாணி கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் ஒரு நபர் பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளார். அந்த பிரியாணியில் பூரான் ஒன்று இறந்து கிடந்துள்ளது. 

இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த அந்த நபர் சம்பவம் குறித்து கடைக்காரரிடம் தெரிவித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். 

இந்த நிலையில், இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது விமர்சனங்களைத் தெரிவித்து வந்தனர்.

அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் சாத்தான்குளம் பகுதியில் உள்ள ஓட்டல்கள் மற்றும் உணவு சார்ந்த கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்திட வேண்டும். 

மேலும், கடைகளில் தயாரிக்கப்படும் உணவுகள் பாதுகாப்பு இல்லாமலும், ஓட்டல்களில் சுகாதாரம் குறைவாகவும் இருந்தால் அவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

puran in biriyani at saththankulam shop vedio viral


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->