ஜாதி ரீதியாக தாக்கம்: மாணவர் மரணத்தில் திடீர் திருப்பம்! வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை, கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மகன் விஷ்ணுகுமார் (வயது 16) இவர் கீரனூர் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். 

கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஷ்ணுகுமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஷ்ணுகுமார் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர் மாணவரின் இறுதி சடங்குகள் நடைபெற்ற நிலையில் போலீசார் காதல் தோல்வியின் காரணமாக மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இந்நிலையில் விஷ்ணுகுமாரின் பெற்றோர், தாசில்தார் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, சக மாணவர்கள் என் மகனை ஜாதி ரீதியாக துன்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டார். 

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து மாணவரின் தற்கொலை வழக்கை வன்கொடுமை சட்டத்தின் கீழ் மாற்றப்பட்டு மாணவரை ஜாதி ரீதியாக துன்புறுத்திய மாணவர்கள் யார் என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pudukkottai sudden twist student death Prevention Violence Act case file


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->