அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு அனுமதி மறுப்பு! கொந்தளிக்கும் பா. ஜனதாவினர்!
Pudukkottai police refused Annamalai yatra
பா. ஜனதா தலைவர் அண்ணாமலை, பல்வேறு மாவட்டங்களில் 'என் மண் என் மக்கள்' என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
அது போல் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 'என் மண் என் மக்கள்' என்ற நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் அவரது நடை பயணத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
காவல்துறை தரப்பில், யாத்திரை நடைபெறும் இடங்களில் மத வழிபாடு தலங்கள், மக்கள் கூடும் இடங்கள், மருத்துவமனைகள் போன்றவை இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வழங்கிய நோட்டீஸ் ஏற்காமல் அறிவிக்கப்பட்டிருந்த வழிகளில் யாத்திரை நடைபெறும் என பா. ஜனதாவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து காவல்துறையினர், பா. ஜனதாவுடன் மாற்றுப் பாதையில் அனுமதி வழங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பா. ஜனதா தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
Pudukkottai police refused Annamalai yatra