தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பரிதாப பலி.. பெற்றோர்களே கவனம்.! - Seithipunal
Seithipunal


தண்ணீர் தொட்டியருகே வீட்டில் விளையாடிய குழந்தை, தொட்டிக்குள் தவறி விழுந்து பலியான சோகம் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர், அண்டக்குளம் கிராமத்தை அடுத்துள்ளது புதுகுடியான்பட்டி. இந்த கிராமத்தை சார்ந்தவர் குமாரசாமி. இவரது மனைவி சுசீலா. இந்த தம்பதிகளுக்கு இரண்டரை வயதுடைய குணவதி என்ற மகள் இருக்கிறார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை நேரத்தில் வீட்டின் பின்புறத்தில் உள்ள தண்ணீர் தொட்டியருகே, குழந்தை குணவதி விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். இதன்போது, திடீரென தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாராத விதமாக விழுந்ததாக தெரியவருகிறது. 

இதனால் குணவதி மூச்சு பேச்சின்றி தண்ணீர் தொட்டிக்குள் கிடக்கவே, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை மீட்டு அண்டக்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குணவதியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த உடையாளிபட்டி காவல் துறையினர், குழந்தை குணவதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிறுகுழந்தைகள் உள்ள வீடுகளில் பெற்றோர்கள் கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai Keeranur Near Village Baby Died Police Investigation 14 Oct 2021


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal