தமிழகத்தில் அதிகரிக்கும் பதட்டம்.. அடுத்தடுத்து அறிவிக்கப்பட்ட போராட்டங்கள்.!!
pudukkottai fishermen protest against srilanka navy
ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 55 பேரை, நேற்று முன் தினம் இலங்கைக் கடற்படை கைது செய்தது. அவர்களுடைய 6 மீன்பிடிப் படகுகளைப் பறிமுதல் செய்தது. இதையடுத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், இலங்கை அரசுக்கு தமிழக அரசியல் கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதனிடையே யாழ்ப்பாணம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டனர். அடுத்தடுத்து இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 69 பேர் சிறைபிடிப்பு பட்ட சம்பவம் மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த அனைத்து விசைப்படகு மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
pudukkottai fishermen protest against srilanka navy