புதுக்கோட்டையை துரத்தும் டெங்கு: ஒரே நாளில் 44 பேர் அனுமதி!
Pudukkottai Dengue 44 people admitted
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதே சமயத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் இடையே அச்சத்தையும் வீதியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 151 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாள் மட்டும் காய்ச்சல் காரணமாக 46 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு வகையில் திட்டமிட்டுள்ளது.
English Summary
Pudukkottai Dengue 44 people admitted