புதுச்சேரி & காரைக்கால் அனைத்து தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு 96.90%
Puducherry & Karaikals overall pass percentage of all private schools is 96.90%.
புதுச்சேரி & காரைக்கால் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவுகளின் படி தனியார் பள்ளிகளில் பயின்ற 8,011 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,109 மாணவர்களும் 3,902 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டன. இந்த பொதுத் தேர்வில் 95.03 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.இந்த நிலையில், 19-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 28-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி வரை நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினார்கள்.
இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு இன்று வெளியாகின. அதன்படி தேர்ச்சி விகிதம் - 93.80 சதவீதம். ஆகும்.தேர்ச்சி பெற்றவர்கள்: 8,17,261 (93.80 சதவீதம்)மாணவியர் 4,17,183 (95.88 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர்.மாணவர்கள் 4,00.078 (91.74 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர்.மாணவர்களை விட4,14 சதவீதம் மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுச்சேரி & காரைக்கால் அனைத்து தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு 96.90%
கடந்த மார்ச் - ஏப்ரல் 2025ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சார்ந்த 4,290 மாணவர்களும் 3,977 மாணவிகளும் ஆக மொத்தம் 8,267 மாணவர்கள் தேர்வு எழுதினர். இன்று (16.05.2025) வெளியான தேர்வு முடிவுகளின் படி தனியார் பள்ளிகளில் பயின்ற 8,011 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,109 மாணவர்களும் 3,902 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
English Summary
Puducherry & Karaikals overall pass percentage of all private schools is 96.90%.