உங்கள் முயற்சிகளை மறுபரிசீலனை செய்து வெற்றிக்கான வழிகளை தேடி முன்னேறுங்கள்...! - வாழ்த்து தெரிவித்த EPS
Reconsider your efforts and move forward in search of ways to succeed EPS congratulates
தமிழகத்தில் இன்று 10ம், 11ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. இதில் தேர்ச்சிப் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு, அதிமுக பொதுச் செயலாளர் ''எடப்பாடி பழனிசாமி'' வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுத்தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி:
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,"இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்.உங்கள் எதிர்கால கல்வி பயணத்திலும் வெற்றி என்ற இலக்கை பெற இதே உழைப்பை தொடருங்கள்.
தேர்ச்சியின் எல்லை வரை சென்று வெற்றியை தவற விட்டவர்கள் யாரும் மனம் தளர வேண்டாம். வெற்றி தோல்வி என்பது வாழ்வில் தற்காலிக நிகழ்வே. உங்களின் முயற்சிகளை மறுபரீசலனை செய்து வெற்றிக்கான வழிகளைத் தேடி முன்னேறுங்கள்.
கற்றலின் மீதான உங்கள் ஆர்வமும், கடின உழைப்பும் உங்கள்வெற்றியை உறுதியாக்கும். உங்களுக்கு என் வாழ்த்துகள்.
All the best! " எனத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, இன்று பல அரசியல் தலைவர்கள் இந்த பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Reconsider your efforts and move forward in search of ways to succeed EPS congratulates