உப்பளம் தொகுதி மேம்பாட்டு பணிகள்..அதிகாரிகளுடன் MLA அனிபால் கென்னடி ஆலோசனை!
Development works in Upllaam constituency MLA Anibal Kennedy consults with officials
உப்பளம் தொகுதி மேம்பாட்டு பணிகள் குறித்து செயற்பொறியாளர் ஸ்ரீனிவாசன் அவர்களை சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் நேரில் சந்தித்து அவசார தீவிர ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி:உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள், புதுச்சேரி மத்திய சாலை மற்றும் கட்டிடம் செயற்பொறியாளர் திரு. ஸ்ரீனிவாசனை சந்தித்து, தொகுதி மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது, அப்துல்கலாம் குடியிருப்பு கட்டிடப்பணிக்கு ஒப்புதல் கோப்புகள் தலைமைச் செயலகம் சென்றிருந்ததைத் தொடர்ந்து, அந்த கோப்பினை விரைவாக ஒப்புதல் அளிக்கும்படி உயர்த்திரு. முத்தம்மா IAS அவர்களை சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று சந்தித்து கேட்டுக்கொண்டார். விரைவில் ஒப்புதல் வழங்குவதாக IAS அதிகாரி உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து, செயற்பொறியாளர் ஸ்ரீனிவாசனுக்கு சட்ட மன்ற உறுப்பினர் இந்த தகவலை அளித்து, பணிகள் விரைவில் நடைபெறுவதற்கான ஒத்துழைப்பையும் கேட்டுக்கொண்டார்.
மேலும், உப்பளம் தொகுதிக்குள் உள்ள டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள கோலாஸ் நகர் நேதாஜி நகர் இணைப்பு உப்பனாரு பாலம் குறுகியதாக உள்ளதால், அதை அகலப்படுத்த வேண்டும் என சட்ட மன்ற உறுப்பினர் தொடர்ந்து வலியுறுத்தியதற்கமைய, ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆலோசனையில் கூறப்பட்டது.இதனுடன், வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்த அலேன் வீதி, நேரு வீதி, பெருமாள் ராஜா வீதி, காளியம்மன் தோப்பு, முருகசாமி தோப்பு, சின்ன எல்லையம்மன் கோவில் வீதி, சித்தி விநாயகர் கோயில் வீதி, கஸ்தூரிபாய் வீதி, காமராஜர் வீதி மற்றும் அப்துல்கலாம் வீதி ஆகிய பகுதிகளில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் குறித்து திட்டக்கோப்புகள் அதிகாரியுடன் சட்ட மன்ற உறுப்பினர் பார்வைக்கு காண்பிக்கப்பட்டு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல், பெரிய பள்ளி மற்றும் வீரர்வெள்ளி பகுதிகளிலுள்ள சிமெண்ட் சாலை அமைக்கும் பணி குறிப்பாக சந்தாசஹிப் வீதி, மீலாத் வீதி, மொரேசன் வீதி, லதிப் சந்து, பாண்டியன் சந்து, அப்பாமேஸ்திரி வீதி, பொண்ணியாகுட்டி வீதி, வஉசி வீதி மற்றும் நைநியாப்பா பிள்ளை வீதிகளிலும் சிமெண்ட் சாலை அமைக்கப்படும் திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்றன.
இவ்வனைத்துப் பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக முடிவு செய்யப்பட்டது, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருவதாகவும் அதற்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள் என்று சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனை நடைபெறும் பொழுது அதிகாரியை கேட்டு கொண்டார்.இச் சந்திப்பின்போது, இளநிலை பொறியாளர் ராமன், தொகுதி செயலாளர் சக்திவேல், காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் கிளை செயலாளர் ராகேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
English Summary
Development works in Upllaam constituency MLA Anibal Kennedy consults with officials