ஆடுகள் வளர்ப்பில் அசத்தும் பெண்..முதலமைச்சருக்கு நன்றி!  - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் ,கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கென செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் பயனடைந்த பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர்க்குமன நிறைவுடன் நன்றியினை தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில்  ஒருங்கிணைந்த தீவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழத்தோட்டங்களில் ஊடுபயிர் முறையில் தீவனப்பயிர்கள் சாகுபடியினை பெருக்குவதற்கு ஏதுவாக, 2022-23 ஆம் நிதியாண்டில் 55 பயனாளிகளுக்கு ரூ.01.20 இலட்சம் மதிப்பீட்டில் 40 ஏக்கருக்கு தீவன விதைகளும், 2024-25 நிதியாண்டில் 57 பயனாளிகளுக்கு ரூ.01.20 இலட்சம் மதிப்பீட்டில் 40 ஏக்கருக்கு தீவன விதைகளும், தீவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு ரூ.03.20 இலட்சம் மதிப்பீட்டில் 50% மானியத்திலான புல்நறுக்கும் கருவிகளும், நீர்ப்பாசன இனத்தில் பசுந்தீவன சாகுபடியினை பெருக்குதல் திட்டத்தின் கீழ் 2024-25ஆம் நிதியாண்டில் 84 பயனாளிகளுக்கு ரூ.01.54 இலட்சம் மதிப்பீட்டில் 60 ஏக்கருக்கான தீவன விதைகளும், இரசாயன உரங்கள் மற்றும் இடை உழவுப்பணி ஆகியவற்றிற்கு 50% அரசு மானியமும் மானாவரி இனத்தில் பசுந்தீவன சாகுபடியினை பெருக்குதல் திட்டம் 2024-25ஆம் நிதியாண்டின் கீழ் 133 பயனாளிகளுக்கு ரூ.02.03 இலட்சம் மதிப்பீட்டில், 140 ஏக்கருக்கான 560 கிலோ எடையிலான தீவன விதைகள் 50% மானிய விலையிலும் வழங்கப்பட்டுள்ளது.
 
ஏழ்மை நிலையில் உள்ள கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின கோழிக்குஞ்சுகள் (40 கோழிக்குஞ்சுகள் வீதம் ) 50% மானியத்தில் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.19.20 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு, 1200 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

ஏழ்மைநிலையிலுள்ள கணவனை இழந்த / கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்த காரைக்குடி, காளையப்பா நகரினை சேர்ந்த திருமதி லெட்சுமி, க/பெ.முருகேசன் அவர்கள் தெரிவிக்கையில்,

எனது பெயர் லெட்சுமி. நான் காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட காளையப்பா நகரில் வசித்து வருகிறேன். நான் எனது கணவரை இழந்த பல வருடங்கள் ஆகிறது. எங்களது குடும்பத்தின் அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாக எனது கணவரின் வருவாய் இருந்து வந்தது. அச்சூழலில், எதிர்பாராத விதமாக எனது கணவரை இழந்த நிலையில், நான் எனது அன்றாட செலவினங்களை மேற்கொள்வதற்கும், எனது குழந்தைகளின் கல்வி மற்றும் அடிப்படை தேவைகளுக்கும் போதிய வருமானமின்றி சிரமம் அடைந்து வந்தேன். நான் தினக்கூலியாக வேலை செய்து, அவ்வாறாக கிடைக்கப்பெறும் வருவாயின் மூலம் எனது குடும்பத்தின் உணவு மற்றும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கே போதுமானதாக இருந்தது. தினசரி வேலைவாய்ப்பினை பெறுவதற்கும் சிரமம் அடைந்தேன்.

அச்சமயம், கடந்த 2022-ல் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ஏழ்மை நிலையிலுள்ள கணவனை இழந்த / கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறியாடுகள் வழங்கும் திட்டம் 2021-2022 குறித்து அறிந்தேன். அதன் பின்னர் கால்நடை பராமரிப்புத்துறையினரை அணுகி, கால்நடை பராமரிப்புத்துறையின் அத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான தகுதிகள் குறித்து அறிந்து கொண்டேன். அத்திட்டத்தின் பயன்கள் குறித்து அவர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.
அதன் அடிப்படையில், உரிய ஆவணங்களுடன் ஏழ்மை நிலையிலுள்ள கணவனை இழந்த / கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு விண்ணப்பித்தேன்.

எனக்கு 2021-2022 ஆம் நிதியாண்டில் 5 ஆடுகள் (4 பெட்டை 1 கிடா) வழங்கப்பட்டது. அவ்வாறாக வழங்கப்பட்ட ஆடுகளை நான் சிறந்த முறையில் பாதுகாத்து, கால்நடை பராமரிப்புத்துறையின் மருத்து அலுவலர்கள் வாயிலாக உரிய வழிகாட்டுதல்களை பெற்று, பராமரித்து வந்தேன். அதன் பலனாக ஆடுகள் நல்ல முறையில் வளர்ந்து, அவை பெருகி, தற்சமயம் என்னிடம் சுமார் 30 ஆடுகள் உள்ளன. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 15 ஆடுகள் வரை விற்பனை செய்துள்ளேன். இதன் மூலம் கிடைக்கப்பெற்ற வருவாயினை கொண்டு, எனது குடும்பத்தின் தேவைகள் மற்றும் எனது குழந்தைகளின் கல்வி தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறேன். எனது கணவரை இழந்த நிலையில், எனது வாழ்வாதார மேம்பாட்டிற்கும் மற்றும் ஒரு தொழில் போன்றும் செய்வதற்கு இவை அடிப்படையாக இருந்தது.

இதுபோன்று, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி, என்னைப் போன்றவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு அடிப்படையான திட்டங்களை தொலைநோக்கு சிந்தனையுடன் தமிழகத்தில் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர்  எனது குடும்பத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என ஏழ்மை நிலையிலுள்ள கணவனை இழந்த / கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்த காரைக்குடி, காளையப்பா நகரினை சேர்ந்த திருமதி லெட்சுமி மன நெகிழ்ச்சியுடள் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A woman excelling in sheep rearing Thank you to the Chief Minister


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->