2022 ம் ஆண்டு ரேஷன் கடைகளுக்கான பொதுவிடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு..!
Public holiday for ration shops
ரேஷன் கடைகளுக்கு 2022 ஆண்டுக்கான பொது விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கடைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குடும்ப அட்டைதாரர்களுக்கு 20கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், சர்க்கரை, எண்ணெய், மண்ணெண்ண்எய் உள்ளிட்ட பொருட்களும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ரேஷன் கடைகளுக்கு வெள்ளிகிழமைகளில் வார விடுமுறை விடப்பட்ட நிலையில், தற்போது தமிழக அரசு 2022ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை மற்றும் பண்டிகைகால விடுமுறையை அறிவித்துள்ளது. அதன்படி,
1) பொங்கல் : 14-01-2022 வெள்ளிக்கிழமை
2) தைப்பூசம் : 18-01-2022 செவ்வாய்கிழமை
3) குடியரசுத்தினம் : 26-01-2022 புதன்கிழமை
4) தமிழ்ப்புத்தாண்டு/டாக்டர் அம்பேத்கர்பிறந்ததினம்/ மகாவீரர் ஜெயந்தி : 14-04-2022 வியாழக்கிழமை
5) மேதினம் : 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை
6) ரம்ஜான் : 03-05-2022 செவ்வாய்க்கிழமை
7) சுதந்திர தினம் : 15-08-2022 திங்கட்கிழமை
8) விநாயகர் சதுர்த்தி : 31-08-2022 புதன்கிழமை
9) காந்தி ஜெயந்தி : 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை
10) விஜயதசமி : 05-10-2022 புதன்கிழமை
11) தீபாவளி : 24-10-2022 திங்கட்கிழமை
12) கிறிஸ்துமஸ் : 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை
ஆகிய நாட்களில் விடுமுறை எனவும் விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு பொதுமக்கள் பொருட்கள் வாங்க வர வேண்டும் என அரசு அறிவிருத்தியுள்ளது.
English Summary
Public holiday for ration shops