10-வது நாளாக நீடிக்கும் போராட்டம்...! அபராதத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள்...!
protest continues 10th day Fishermen shocked by fine
தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து 55 நாட்கள் ஆகியுள்ளது.இதில் இலங்கை கடற்படையால் பாம்பன் மற்றும் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 61 மீனவர்கள் எல்லைதாண்டி வந்ததாக கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து,மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த 11-ம் தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.இதனால்,5000க்கும் மேற்பட்டோர் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.இந்த சூழ்நிலையில்,இன்று 10-வது நாளாக ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம் நடத்தி வருகின்றனர்.
இந்த வேலைநிறுத்தத்தால் இதுவரை ரூ.15 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த வேலைநிறுத்ததால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிப்பதாவது,"இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
இது 10 நாட்களாக நீடிப்பதால் வருமானமின்றி குடும்பம் நடத்தவே சிரமமாக உள்ளது. இதனால் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.ஆகையால், இந்த பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று கவலையுடன் தெரிவித்தனர்.
இதனிடையே, நேற்று மீனவர்களின் விடுதலை கோரிக்கையை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் பெண்கள் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.இந்நிலையில்,இலங்கை சிறையிலுள்ள பாம்பன் நாட்டு படகு மீனவர்கள் ஒன்பது பேருக்கு தலா ரூ.3.50 கோடி (இலங்கை பணம்-இந்திய மதிப்பில் ரூ.ஒரு கோடி) கூடிய அபராதத்துடன் விடுதலை செய்து புத்தகம் நீதிமன்றம் உத்தரவிட்டது.இது தற்போது மீனவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
protest continues 10th day Fishermen shocked by fine